நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 'சிசிடிவி' கேமரா கட்டாயம் என, தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால், மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். மேலும், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும்.
சிசிடிவி கேமரா (CCTV Camera)
தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி., தலைவர் டாக்டர் சுரேஷ் சந்திர சர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பு: நாட்டில் உள்ள மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியம். வளாக முகப்பில், ஒரு கேமராவும், நோயாளிகள் பதிவு இடத்தில் இரண்டு கேமராவும், புறநோயாளிகள் பிரிவில் ஐந்து கேமராக்களும் பொருத்த வேண்டும்.
அதேபோல, விரிவுரை கூடங்கள், ஆய்வகங்கள், அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் கேமராக்கள் பொருத்துதல் அவசியம். மருத்துவ கல்லுாரி முழுதும் 25 கேமராக்கள் இருந்தல் அவசியம். ஒவ்வொரு கேமராவும், '4 கே' துல்லியத் தன்மையுடன் இருத்தல் அவசியம்.
மருத்துவக் கல்லூரியில் பொருத்தப்படும் கேமராக்களால், நோயாளிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
சீரகத் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!
தமிழகத்தில் முதன்முறையாக சுற்றுலாத் துறை தொழில்முனைவோருக்கு விருது!
Share your comments