சென்னை, கோவை, நெல்லை, திருச்சியில், வன விலங்குகளுக்கான (Wildlife) அவசர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கோவை, நெல்லை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் புலிகள் மற்றும் யானைகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றில் புலிகள், யானைகள் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இருப்பினும், விலங்குகளுக்குள் ஏற்படும் சண்டை காரணமாகவும், உணவுக்காக காட்டை விட்டு வெளியில் வருவதாலும், விலங்குகள் தாக்கப்படுகின்றன.
விலங்குகளுக்கு சிகிச்சை
இது போன்ற தாக்குதலுக்கு ஆளாகும் விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது வனத் துறையின் பொறுப்பு.காயம் ஏற்பட்டு தவிக்கும் விலங்குகளை மீட்கும் வனத் துறையினர், அவற்றை அவசர சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக வண்டலுாருக்கு அனுப்புவது வாடிக்கை. இதற்காக விலங்குகள், வாகனத்தில் நீண்ட துாரம் பயணிக்க வேண்டியுள்ளது.காயம்பட்ட நிலையில், இப்படி நீண்ட தொலைவு பயணிப்பதே விலங்குகளுக்கு பாதிப்பை அதிகரிக்க வழிவகுத்து விடுகிறது.
சமீபத்தில், நீலகிரி மாவட்டம் கூடலுாரில் பிடிபட்ட புலி, கர்நாடக மாநிலம் மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டது.இதை கருத்தில் வைத்து, விலங்குகளுக்கு விரைவாக சிகிச்சை (Treatment) கிடைக்க, கோவை, திருநெல்வேலி, திருச்சியில், வன உயிரின அவசர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. மருத்துவ சிகிச்சை மையமாக மட்டுமல்லாது, வன உயிரின பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மையமாகவும் இவை செயல்படும்.இந்த மையங்களை ஏற்படுத்தும் வனத் துறையின் திட்டத்துக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா அபார சாதனை!
முதன்முறையாக கால்நடைகளுக்கான எரிவாயு தகன மேடை: சென்னையில் திறப்பு!
Share your comments