குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான, 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, அவசர கால கடன் உத்தரவாத திட்டம், மேலும் 3 மாதங்களுக்கு, நீட்டிக்கப்படுவதாக மத்திய அரச அறிவித்துள்ளது.
மிரட்டும் கொரோனா (Intimidating corona)
கடந்த ஆண்டு அச்சுறுத்தியக் கொரோனா பீதியில் இருந்து இன்னும் நாம் முழுமையாக விடுபடவில்லை.
கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)
அதற்குள் தற்போது கொரோனா 2-வது அலை வீச ஆரம்பித்துள்ளது. இந்த அலை, அதைவிட வீரியம் மிக்கது என அறிவிக்கப்பட்டுள்ளதால், நாள்தோறும் அச்சத்துடனேயே வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
கடன் உதவித் திட்டம் (Credit Assistance Scheme)
கொரோனா நெருக்கடி மற்றும் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மக்கள் மீள்வதற்காக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஆவண உத்தரவாதம் இன்றி (Without document guarantee)
இதன்படி, நிறுவனங்கள் எந்த பிணையும் இன்றி, வங்கிகளில், குறிப்பிட்ட கடன் தொகையை, பெற்றுக் கொள்ள முடியும். இந்த கடன்கள், 12 பொதுத் துறை வங்கிகள், 24 தனியார் துறை வங்கிகள், 31 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
3 மாதங்கள் நீட்டிப்பு (3 months extension)
இந்நிலையில், இந்த திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தற்போதைய மூன்றாம் கட்டத்தில், விருந்தோம்பல், பயணம் மற்றும் சுற்றுலா, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளுக்கும் கடனுதவி வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது, மூன்று லட்சம் கோடி ரூபாய் முழுவதையும் கொடுத்து முடிக்கும் வரை, அல்லது, ஜூன் 30ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். இவ்வாறு மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
விவசாய சட்டங்கள் பற்றிய அறிக்கையை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது நிபுணர் குழு!
கோடை உழவுக்காக நிலத்தை தயார் செய்யும் விவசாயிகள்!
கடன்களிலிருந்து எப்படி வரியை சேமிக்கலாம்! சில உதவிக்குறிப்புகள்.!
Share your comments