1. செய்திகள்

44 கோடி தடுப்பூசி கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆர்டர்!

Daisy Rose Mary
Daisy Rose Mary

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தி, முதல்கட்டமாக 44 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது.

மாநிலங்களுக்கும் இலவச தடுப்பூசி

நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசிகளை வழங்கும் என பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். மேலும், ஜூன் 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே ஏற்று முழுமையாக நடத்தும் என்றும் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

44கோடி தடுப்பூசி ஆர்டர்

இந்நிலையில், 44 கோடி கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கான கொள்முதல் உத்தரவை மத்திய அரசு இன்று பிறப்பித்துள்ளது. இதன்படி, மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்காக, 25 கோடி கோவிஷீல்டு மற்றும் 19 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான உத்தரவை, மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

இந்த தடுப்பூசிகள் நடப்பாண்டு டிசம்பர் மாதம் வரை கிடைக்கும் என்றும், 30 கோடி பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் தடுப்பூசியும் செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

74 கோடி டோஸ் தடுப்பூசி பிரித்து வழங்கப்படும்

இது குறித்து, டெல்லியில் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 44 கோடி தடுப்பூசி வாங்க மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. சீரம் இந்தியா நிறுவனத்திடம் இருந்து 25 கோடி கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோ டெக் நிறுவனத்திடமிருந்து 19 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசியும் வாங்கப்பட உள்ளது. பயோ லாஜிக்கல் - இ நிறுவனத்தின் 30 கோடி டோஸ் தடுப்பூசியும் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயோ லாஜிக்கல் - இ நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசி வாங்க 1,500 கோடி ரூபாயை மத்திய அரசு செலுத்தி உள்ளது. மூன்று நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் 74 கோடி டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க....

கொரோனா 3-வது அலை குழந்தைகளை கடுமையாக பாதிக்குமா?- எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்!!

N95 மாஸ்க் ரூ.22, பிபிஇ கிட் உடை - ரூ.273 மட்டுமே மற்றும் பல மருத்துவ பொருட்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம்!

English Summary: Central government orders purchase of Rs 44 crore worth of vaccines Published on: 09 June 2021, 09:43 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.