பசுமை மின்சக்தி திட்டங்களில் LIC, EPFO நிறுவனங்களை முதலீடு செய்ய வைக்கவும், அரசின் பென்சன் நிதியை முதலீடு செய்யவும் இந்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பென்சன் நிதி முதலீடு
பவர் பைனான்ஸ் நிறுவனம் (PFC), REC, IREDA போன்ற மின்சார நிறுவனங்கள் விநியோகிக்கும் பத்திரங்களில் பென்சன் நிதியை முதலீடு செய்யவும், LIC மற்றும் EPFO நிறுவனங்களை முதலீடு செய்ய வைக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசிக்கும் (LIC), தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துக்கும் (EPFO) நிர்வாகத்தில் பல லட்சம் கோடி ரூபாய் சொத்துகள் இருக்கின்றன. LIC மற்றும் EPFO நிறுவனங்களிடம் மொத்தமாக 50 லட்சம் கோடி ரூபாய் சொத்துகள் இருக்கின்றன.
2070ஆம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழல் இலக்குகளை எட்டுவதற்கு தேவையான முதலீட்டில் இன்னும் 3 லட்சம் கோடி டாலர் பற்றாக்குறை இருக்கிறது. இதை சமாளித்து முதலீடுகளை திரட்டுவதற்காக பென்சன் நிதியை முதலீடு செய்யவும், LIC மற்றும் EPFO நிறுவனங்களை பத்திரங்களில் முதலீடு செய்ய வைக்கவும் அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, LIC மற்றும் EPFO நிறுவனங்களின் சொத்துகளில் 1% மட்டும் பசுமை மின்சக்தி திட்டங்களுக்கான பத்திரங்களில் முதலீடு செய்ய வைக்க அரசு திட்டமிட்டு வருவதாக அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
இந்த திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்தால், LIC மற்றும் EPFO நிறுவனங்களுக்கான முதலீட்டு கமிட்டிகளிலும் ஒப்புதல் கிடைக்க வேண்டும் என கூறப்படுகிறது. அதன் பிறகே மேற்கூறியபடி பசுமை மின்சக்தி திட்டங்களுக்கான பத்திரங்களில் LIC மற்றும் EPFO நிறுவனங்கள் முதலீடு செய்ய முடியும். தற்போது LIC மற்றும் EPFO நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு 50 லட்சம் கோடி ரூபாய். டாலர் அடிப்படையில் இந்த சொத்துகளின் மதிப்பு 604.87 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
ரெப்போ வட்டி உயர்வு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: வருகிறது உத்தரவாத பென்சன் திட்டம்!
Share your comments