மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கைக்கு அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயரும் மத்திய கல்வி அமைச்சகம் என்று மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி, 3 முதல் 18 வயது வரை கட்டாயக்கல்வி, 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, 6ம் வகுப்பு முதல் தொழில்கல்வி ஆகியவைக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 6-ஆம் வகுப்பில் இருந்து கடைப்பிடிக்கப்படும் மும்மொழிக் கொள்கையில், மூன்றாவது மொழியாக மாணவா்கள் தாங்கள் விரும்பும் மொழியை தோ்வு செய்து கொள்ளலாம். இதன்மூலம், ஹிந்தி அல்லது சம்ஸ்கிருதமே 3-வது மொழியாக இருக்கும் என்று வரைவு தற்போது கைவிடப்பட்டுள்ளது.
இதுதவிர, கல்லூரிகளில் சேருவதற்கு தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தோ்வு, எம்.ஃபில். படிப்பு நிறுத்தம், தொழிற்கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும் , மருத்துவம், சட்டப்படிப்பு தவிர, அனைத்து கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் சேருவதற்கு தேசிய அளவிலான நுழைவுத் தோ்வு நடத்தப்படும்.
இளநிலை படிப்புகளில் மாணவா்கள் விரும்பிய பாடங்களை மட்டும் தோ்வு செய்து படிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் இருக்கும். இந்தப் படிப்புகளுக்கான காலம், 3 ஆண்டுகள் அல்லது 4 ஆண்டுகளாக இருக்கும்.
பெரும்பாலான கல்லூரிகள் பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் தற்போதைய நடைமுறை, அடுத்த 15 ஆண்டுகளில் படிப்படியாகக் கைவிடப்பட்டு, அனைத்து கல்லூரிகளுக்கும் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும்.
வரவேற்பு
மத்திய அரசின் இந்த புதியக் கல்விக்கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதேபோல் கல்வியாளர்களும், பெற்றோரும் புதியக் கல்விக்கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
தோட்டக்கலை பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை - இணையதளத்திலேயே விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!
Share your comments