1. செய்திகள்

உலகப் புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளது!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
save tiger

Image credit: Deccan herald

விலங்குகளுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் தீவனங்கள், வனப்பகுதிகளிலேயே கிடைக்கச் செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இன்று சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது (International Tiger Day). இதனை முன்னிட்டு புலிகள் கணக்கெடுப்பு பற்றிய விரிவான அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அப்போது பேசிய அவர் புலிகள் இயற்கையின் ஒருங்கிணைந்த அங்கம் என்பதோடு, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, இயற்கையின் சமநிலையைப் பிரதிபலிக்கிறது என்றார்.

சர்வதேச அளவில் இந்தியா வெளிப்படுத்தி வரும் மென்மையான போக்கின் ஒரு வகை தான் புலிகள் மற்றும் பிற வன உயிரினங்கள், என்று திரு.பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். குறைந்த அளவிலான நிலப்பரப்பு போன்ற பல்வேறு தடைகள் இருப்பினும், இந்தியாவின் உயிர்ப்பன்மை 8 சதவீத அளவிற்கு உள்ளதாகவும், இயற்கை, மரங்கள் மற்றும் வன உயிரினங்களைப் போற்றிப் பாதுகாக்கும் கலாச்சாரம் நம் நாட்டில் இருப்பது தான் இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

70% புலிகள் இந்தியாவில் உள்ளது 

வன உயிரினங்கள் இயற்கை நமக்கு அளித்த சொத்து என்று கூறிய திரு.பிரகாஷ் ஜவடேகர், உலகில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் இருப்பது (India accounts for 70% of world's tigers) பெருமைக்குரியது என்றார். புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, புலிகள் அதிகம் வசிக்கும் 13 நாடுகளுடன் இணைந்து இந்தியா அயராது பாடுபட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

விலங்குகளின் உயிரிழப்புக்குக் காரணமான மனிதன் – விலங்குகள் மோதலால் ஏற்படும் சவாலை எதிர்கொள்ள, விலங்குகளுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் தீவனங்கள், வனப்பகுதிகளிலேயே கிடைக்கச் செய்வதற்கான திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் திரு.ஜவடேகர் குறிப்பிட்டார்.

International Tiger day

Image credit : Free press journal

புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை 

புலிகள் அதிகம் வசிக்கும் நாடுகளின் தலைவர்கள், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கூடி, புலிகள் பாதுகாப்பு பற்றிய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உடன்படிக்கையில் (St. Petersburg Tiger Summit that aims to double tiger population) கையெழுத்திட்டதன் வாயிலாக, 2022ஆம் ஆண்டுக்குள் உலகளவில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க உறுதி பூண்டுள்ளனர்.

மேலும், ஆண்டுதோறும் ஜுலை 29-ஆம் தேதியை உலகப் புலிகள் தினமாக, உலகெங்கும் கொண்டாட முடிவு செய்யப்பட்டதிலிருந்து, புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய புலிகளின் எண்ணிக்கை 

இந்தியாவில் தற்போது புலிகளின் எண்ணிக்கை 2,967-ஆக உள்ளது (The current population of Indian Tiger is 2,967) இது, உலகின் மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் ஆகும். கேமரா ஆதாரத்துடன் கூடிய வன உயிரினக் கணக்கெடுப்பு நடத்த நாடு மேற்கொண்ட முயற்சிகளால், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் கிடைத்திருப்பது, இந்தியாவின் மகுடத்தில் மற்றொரு சிறப்பாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க...

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை! தண்ணீரில் மூழ்கிய சாலைகள்! மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து?

இந்திய எல்லையில் நுழையக் காத்திருக்கும் (வெட்டுக்கிளி) எதிரிகள் - மத்திய அரசு எச்சரிக்கை!

 

English Summary: India has 70 percent of the worlds tigers, Lets save Tiger on international Tiger day

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.