1. செய்திகள்

மத்திய அரசு: சிறுவர்களுக்கு ‘கோவேக்சின்’ மட்டுமே போடப்படும் என உறுதி

Deiva Bindhiya
Deiva Bindhiya

Central govt: Children above 15 will vaccinate by Cowaxin only

நாடு முழுவதும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், 3-வது அலை உருவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதற்கிடையே, கடந்த 25-ந் தேதி பிரதமர் மோடி, 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவித்தார். சுகாதார, முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி ஜனவரி 10ஆம் தேதி தொடங்கும் எனவும் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள், ஜனவரி 3ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

நேறிமுறைகள் (Rules):

15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறுவர்கள், தடுப்பூசி செலுத்த தகுதி உடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 2007-ம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

இந்த வயது சிறுவர்களுக்கு, ‘கோவேக்சின்’ தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனேன்றால் தற்போது கோவேக்சின் மட்டுமே ஒப்புதல் பெற்றுள்ளது. எனவே, அவர்களுக்கு கோவேக்சின் மட்டுமே செலுத்தப்படும். அவர்கள் ‘கோவின்’ இணையதளத்தில் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதுபோல், சுகாதார, முன்கள பணியாளர்கள், 60 வயதை கடந்தவர்கள், இணை நோய் கொண்டவர்கள் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் (பூஸ்டர்) தடுப்பூசி போடுவதற்கான தகுதி, அவர்கள் 2-வது டோஸ் போட்டுக்கொண்ட தேதி அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தேதியில் இருந்து 9 மாதங்கள் முடிந்த பிறகு, அதாவது 39 வாரங்கள் கழித்து, பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

கோவின்’ இணையதளத்தில் உள்ள தேதிப்படி, 9 மாதங்கள் ஆனவுடன் அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட தகவல், தடுப்பூசி சான்றிதழில் இடம்பெறும். 60 வயதை தாண்டியவர்கள், இணை நோய் கொண்டவர்கள் ஆகியோர் டாக்டர்களின் ஆலோசனையை பெற்று பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

கோவின்’ இணையதளத்தில் ஏற்கனவே உள்ள கணக்கை பயன்படுத்தியோ, அல்லது செல்போன் மூலம் புதிய கணக்கு உருவாக்கியோ பெயரை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்களில் நேரில் சென்றும் பதிவு செய்து கொள்ளலாம்.

வருமானத்தை பொருட்படுத்தாமல், தகுதியுள்ள அனைவருக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும். பணம் செலுத்த முடிந்தவர்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளனர்.

கோவின்’ இணையதளத்தில் சிறுவர்கள் பெயர் பதிவு செய்யும் பணி ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தகவலை இணையதளத்தை நிர்வகிக்கும் டாக்டர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்தார்.

மேலும் படிக்க:

சிலிண்டர் வைத்திருப்போருக்கு 50லட்சம் வரை காப்பீடு

Flipkart Sale: அட்டகாசமான ஆஃபரில் ஸ்மார்ட்வாட்ச் - 60% வரை தள்ளுபடி

English Summary: Central govt: Children above 15 will vaccinate by Cowaxin only

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.