வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் துணை திட்டம் மூலம் விவசாயிகளை மேம்படுத்த, பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. இதில் 2014-15ம் ஆண்டு முதல் 2020-21ம் ஆண்டு வரை தமிழகத்துக்கு ரூ.421.65 கோடியை வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் துறை வழங்கியுள்ளது.
பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டம்
வேளாண் உபகரணங்கள் வாடகை மையங்கள், வேளாண் இயந்திர வங்கி, ஹை-டெக் மையங்கள், பல மாநிலங்களுக்கு வேளாண் இயந்திரங்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.
நிலங்களின் பயன்பாடு, நீர் வளங்கள், வேலை ஆட்கள், விதைகள், உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள் போன்றவற்றை திறம்பட பயன்படுத்தி, வேளாண் தொழிலை லாபகரமாக மாற்றுவதிலும், கிராமப்புற இளைஞர்களுக்கு ஈர்ப்பான தொழிலாக மாற்றுவதிலும் இயந்திரமயமாக்கல் முக்கிய பங்காற்றுகிறது. வேளாண் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில், இயந்திரமயமாக்கல் முக்கியமான அம்சமாக உள்ளது. ஒருங்கிணைந்த வேளாண் இயந்திரமயமாக்கல் வளர்ச்சிக்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வேளாண் இயந்திரங்கள் தேவை.
தமிழகத்துக்கு ரூ.21.74 கோடி
2014-15ம் ஆண்டு முதல் 2020-21ம் ஆண்டு வரை தமிழகத்துக்கு ரூ.421.65 கோடியை வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை வழங்கியுள்ளது. 2021-22ம் நிதியாண்டில் முதல் தவணையாக ரூ.21.74 கோடி வேளாண் இயந்திரமயமாக்கல் துணை திட்டத்தின் கீழ் வழங்கபட்டுள்ளது. இதன் மூலம் 259 வேளாண் இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள் வழங்கப்படும். 115 வேளாண் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்படும். 10 ஹைடெக் மையங்கள் மற்றும் 100 விவசாய இயந்திர வங்கிகள் கிராம அளவில் அமைக்கப்படும்.
மேலும் படிக்க....
நெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு! விவசாயிகள் மகிழ்ச்சி!
Share your comments