1. செய்திகள்

கல்லணையில் ரூ. 1036 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் - முதலமைச்சர் ஆய்வு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

Credit : daily thanthi

கல்லணையில் ரூ.1036 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள், தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தூர்வாரும் பணிகள் ஆகியவற்றை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில், நீர்வளத் துறை சார்பில் நீர் வள அமைப்புகள் விரிவாக்கம், புதுப்பித்தல், புனரமைத்தல் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக 1036 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மேலும், நீர்வளத் துறை சார்பில் காவேரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தூர்வாரும் பணிகள் குறித்தும் முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன வசதிக்காக திறந்துவிடப்படும் தண்ணீர் விரயமாகாமல் கடைமடை வரை தடையின்றி சென்று சேரும் வகையில், டெல்டா பாசனப் பகுதிகளில் நீர் நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து நிறைவேற்ற தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, நீர்வளத் துறையின் சார்பில், திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில், ரூ.65.10 கோடி திட்ட மதிப்பில் 4061.44 கிலோ மீட்டர் தூரத்திற்கு 647 பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

குறித்த காலத்தில், தரமான முறையில் பணிகளை முடிக்க ஏதுவாக, 9 மாவட்டங்களுக்கும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்படி பணிகள் தொடர்பாக உழவர் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அக்குழுக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு, வெளிப்படைத் தன்மையுடன் பணிகள் நடைபெறுவதை தெரிவிக்கும் வகையில் அனைத்து தகவல்களும் ஆவணப்படுத்தப்பட்டு அறிவிப்பு பலகைகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள

உணவு உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைக்கும்

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்காக விவசாயிகளுக்கு உதவும் வகையில் விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் ஆகியவை போதுமான அளவிற்கு இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் மூலமாக டெல்டா மாவட்டங்களில் நீர்வளம் மேம்படும்.

இவ்வாண்டு நிர்ணயிக்கப்பட்ட சாகுபடி இலக்கைத் தாண்டி உணவு உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவேரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.

தஞ்சை மற்றும் திருச்சியில் முதலமைச்சர் ஆய்வு

முதலாவதாக, தஞ்சாவூர் வட்டம், வல்லம் வடக்கு கிராமத்தில் 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதலை முத்துவாரி வடிகாலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும், தஞ்சாவூர் வட்டம், பள்ளியக்ரஹாரம் கிராமத்தில் 17 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெண்ணாற்றில் மண்திட்டுக்களை சமன்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கொடியாலம் கிராமத்தில், 29.70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புலிவலம் மணற்போக்கி வடிகால் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க...

கோவைக்காய் பயிரிட சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

நெற்பயிர்களைத் தாக்கும் கருப்பு நாவாய் பூச்சி! கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

புதுப்பொலிவுடன் காட்சி தரும் மேட்டூர் அணை! நாளை தண்ணீர் திறப்பு

English Summary: Chief Minister of Tamilnadu inspected the extension, renovation and restoration work in progress at Kallanai, Thanjavur District,

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.