பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் முதல், 45 வயது வரை உள்ள பெண்கள், கர்ப்பப்பை வாய் கேன்சர் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். தொடர்ந்து இரண்டு மாதங்கள், மாதத்திற்கு ஒன்று, அதன்பின் நான்காவது மாதத்தில், ஒரு 'பூஸ்டர் டோஸ்' போட வேண்டும். குறிப்பிட்ட இந்த கேன்சரை உண்டாக்கும் மரபணு உள்ளவர்களுக்கு, ஏழு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு தரும் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தடுப்பூசி (Vaccine)
15 வயதிற்குள், இரண்டு ஊசி போதுமானது. இது தவிர, ஆரம்ப நிலையிலேயே கண்டறிய, 'பேப் ஸ்மியர்' பரிசோதனை உள்ளது. இந்த பரிசோதனை செய்தால், கர்ப்பப்பை வாயில் கேன்சர் வரும் வாய்ப்பு உள்ளதா என்பதை, 15 ஆண்டுகளுக்கு முன்னரே கூட கண்டறிய முடியும்.
கர்ப்பப்பை வாய் கேன்சர் (Cervical Cancer)
மிக எளிமையான பரிசோதனை இது. வலியோ, மயக்க மருந்து தர வேண்டியதோ இல்லை. சுய சுகாதாரமின்மை, பாதுகாப்பற்ற தாம்பத்திய உறவின் வழியாகவே இந்த கேன்சர் வரும். காரணம், ஹெச்.பி.வி., எனப்படும், 'ஹியூமன் பாப்பிலோனா' வைரஸ். இந்த வைரஸ், கேன்சரை துாண்டக் கூடிய வாய்ப்புகள் உள்ளதா என்பதை பரிசோதிக்கவும் நவீன முறை உள்ளது.
கர்ப்பப்பை வாய் கேன்சர் பாதித்தால், பல நேரங்களில் அறிகுறிகளே இருக்காது. பல பெண்களுக்கு, முற்றிய நிலையிலேயே பருத்திப் பூ போல வெளியில் தெரிய வரும். 30 - 65 வயது வரை உள்ள பெண்கள், குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதித்துக் கொள்வது நல்லது. கர்ப்பப்பை வாய் கேன்சர் தடுப்பூசி, பல நேரங்களில் மற்ற கேன்சரையும் தடுக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
தகவல்: இந்திய மருத்துவக் கவுன்சில்
மேலும் படிக்க
Share your comments