1. செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல்லில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டத்திலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 

9-1-2021 தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

10-1-2019 ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் கன மழையும் ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

11-1-2020 அன்று ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கனமழையும் ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

12-1-2019 தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

சென்னை வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸகவும் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

மழைபொழிவு

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக ஆண்டிபட்டி (தேனி) நத்தம் (திண்டுக்கல்) புலிப்பட்டி (மதுரை) தல 6 சென்டி மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக அதிராமபட்டினம் (தஞ்சாவூர்) குன்னூர் (நீலகிரி) செய்யூர் (செங்கல்பட்டு) மதுரை விமானநிலையம், பாபநாசம் (திருநெல்வேலி) வால்பாறை (கோவை) சிவகிரி (தென்காசி) தல 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

மேலும் படிக்க...

தென்னை ஆராய்ச்சி பணியைத் துவங்க வேண்டுமென விவசாயிகள் அரசிடம் கோரிக்கை!

டெல்லியில் டிராக்டர் பேரணிப் போராட்டத்தை கையிலெடுத்த விவசாயிகள்

காரைக்காலில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம்! வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்!

English Summary: Chance of heavy rain in 14 districts for next 4 days in Tamil Nadu says IMD

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.