வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குத் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை பொழிவு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக டிஜிபி அலுவலகம் 11 செ.மீ, மண்டபம், அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா 6 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க..
காய்கறிகளுக்கு முதல் முறையாக ஆதார விலையை நிர்ணயித்த கேரளா அரசு!!
தமிழகத்தில் 59 அணைகள் உட்பட 736 அணைகள் புனரமைப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
தீபாவளி நற்செய்தி : ஜன் தன் வங்கி கணக்கில் மீண்டும் ரூ.1500 செலுத்த மத்திய அரசு முடிவு!
Share your comments