வெப்பச்சலனம் மற்றும் குமரிக்கடல், இலங்கை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், கோவா, கர்நாடக கடலோர பகுதி முதல் தென் தமிழ்நாடு வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் (Chennai Meterological Center) தெரிவித்துள்ளது.
கனமழை
விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை (Heavy Rain) பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஒருசில வட உள் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மேலும் படிக்க
அதிர்ச்சி ரிப்போர்ட்: கொரோனா நோயாளிகளைத் தாக்கும் தோல் பூஞ்சை நோய்! கர்நாடகத்தில் கண்டுபிடிப்பு
தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு! முதல்வர் உத்தரவு
Share your comments