1. செய்திகள்

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு! முதல்வர் உத்தரவு

R. Balakrishnan
R. Balakrishnan
MK Stalin
Credit : DInamani

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் 2 வாரங்களுக்கு முன்பு மிக கடுமையாக இருந்தது. நாளொன்றுக்கு தொற்று ஏற்படக் கூடியவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்த நிலையில் முழு ஊரடங்கு (Full Curfew) உத்தரவு கடந்த மே 24-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது.

முழு ஊரடங்கு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இது பற்றி கூறுகையில் இது முழு திருப்தி அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார். எனவே தொற்று பரவலின் வேகத்தை மேலும் கட்டுப்படுத்தவும், கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவும் கூடுதலாக, அதாவது மே 31-ந் தேதியில் இருந்து ஜூன் 7-ந் தேதிவரை (வரும் திங்கட்கிழமை) மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீடிக்கும் என உத்தரவிட்டார்.

தற்போது நீடிக்கும் முழு ஊரடங்கிலும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் 24 ஆயிரமாக குறைந்து வருகிறது. படிப்படியாக அதிகரித்து உச்சநிலையை எட்டியுள்ள கொரோனா பரவலை கீழே கொண்டு வருவதில் அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது.

எனவே இந்த வேகத்தை விட்டுவிடாமல் இருக்க என்ன செய்யலாம்? என்று ஆலோசிப்பதற்காக நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகளை கொண்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக இந்த முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீடிக்கலாமா? என்று நேற்றைய கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் சில மாவட்டங்களில் மட்டும் அதிக தொற்று பரவல் இருப்பது எடுத்துரைக்கப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்று குறைந்திருப்பதும் கூறப்பட்டது.

Lockdown
Credit : The indian express

நீட்டிப்பு

இதை தொடர்ந்து தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து, முதல்- மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளீயிட்டு உள்ளார்.

  • தமிழகத்தில் ஜூன் 14 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
  • கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி.
  • மளிகை, பலசரக்குகள் காய்கறி, இறைச்சி கடைகள் நேரக்கட்டுபாடுடன் செயல்பட அனுமதி,காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை
    கடைகள் செயல்பட அனுமதி
  • தமிழகத்தில் மளிகை, பழக்கடை, பூக்கடை, நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல், மாலை 4 மணி வரை செயல்படலாம்
  • மீன்சந்தைகள் (Fish Market) மொத்த விறபனைக்காக மட்டும் அனுமதி
  • அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி
  • தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

மேலும் படிக்க

கொரோனா தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பு! ஆய்வில் தகவல்!

அதிர்ச்சி ரிப்போர்ட்: கொரோனா நோயாளிகளைத் தாக்கும் தோல் பூஞ்சை நோய்! கர்நாடகத்தில் கண்டுபிடிப்பு

English Summary: Curfew extended for another week with relaxations in Tamil Nadu! Chief Order Published on: 05 June 2021, 11:23 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.