தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கன மழைக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
லேசான மழை (Light Rain)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட மற்றும் தென் கடலோர மாவட்டங்களின் பொரும்பாலான இடங்களில், லேசானது முதல் மிதமான மழை (Moderate rain) பெய்யக்கூடும்.
வெள்ளக்காடானது (Floodplain)
சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் விடிய விடிய இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
இதையடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
-
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் காலை 10 மணி வரை மழை தொடரும்.
-
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரத்திலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
-
வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும்.
-
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி அரியலூர் மற்றும் புதுக்சேரி காலைக்கார் பகுதிகிளில் ஒருசில இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
சென்னை (Chennai)
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடக் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
எந்தெந்த பயிர்களுக்கு எப்போது & எவ்வளவு தண்ணீர் தேவை?
மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!
பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!
Share your comments