வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை
இன்று மற்றும் நாளை வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டஙள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சென்னை, புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையை நிலைவும்.
வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
-
இன்று மற்றும் நாளை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
இன்று முதல் வரும் 23ம் தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதனால் மீனவர்கள் பேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
‘நீரா’ பானம் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை! - தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி!!
பருப்பு விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை! : ஒருங்கிணையும் மத்திய - மாநில அரசுகள்!
கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வெங்காய விதை வினியோகம்!
Share your comments