தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வரும் 7ம் தேதி ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
05.03.21 முதல் 06.03.21 வரை (From 05.03.21 to 06.03.21)
இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
07.03.21 முதல் 09.03.21 வரை
தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும், வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
எனினும், கோடை வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரிக்கத் தொடங்கிவிட்டதால், மக்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.
மதிய வேளையில் வெளியில் செல்வதைத் தடுத்தால், பல நோய்களுக்கு ஆளாகாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க...
ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி?
TNAUவின் மாதாந்திர நேரடி அங்கக வேளாண்மை பயிற்சி- அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது!
கலப்பு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் என்ன ஆபத்து?
Share your comments