தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில், இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் நெல் உள்ளிட்ட தானிய மூட்டைகளைப் பாதுகாப்பதற்கு ஏற்ப தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மிதமான மழை
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும், ஓரிரு இடங்களில், மிதமான மழை பெய்யக் கூடும்.நாளை மறுதினம் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
27ம் தேதி
வரும் 27ம் தேதி, நீலகிரி, கோவை, சேலம், திருச்சி, மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
நாளை மற்றும் நாளை மறுதினம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய வட கடலோரப் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 40 - 60 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இந்நாட்களில் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
எனவே விவசாயிகள் தங்கள் நெல் உள்ளிட்ட தானிய மூட்டைகளைப் பாதுகாப்பதற்கு ஏற்ப தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க...
Share your comments