வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 4 மாவட்டங்களில் மிக கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று அழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ளது.
இதன் காரணமாக, தெற்கு அந்திர கடலோரப்பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு இரு இடங்களில் மிக கன மழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் கடல் பகுதியில் வருகிற 14ம் தேதி உருவாகக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று அழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ளது.
மழைபொழிவு
கடந்த 24 மணிநேரதில் வேப்பூர் (கடலூர்)13 செமீ, ஒகேனக்கல் (தர்மபுரி)மதுரை சவுத் தலா 8 செமி, சேத்தியாத்தோப்பு, ராசிபுரம் பகுதிகளில் தலா 7 செமீ, மேலூர், சிவகங்கை, நிலக்கோட்டை, தல்லாகுளம், சோழவந்தான், சூலகிரி, வீரகனூர், ஆகிய பகுதிகளில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அக் 10 - 14 வரை குமரிக் கடல் மற்றும் வளைகுடா பகுதிகளில், மணிக்கு 45 -55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
அக் 10-14 வரை அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
அக் 11, 12 ஆகிய தேதிகளில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில், மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
அக் 10ம் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில், மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்
எனவே, மீனவர்கள் யாரும் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்க...
இந்தியாவில் முதல் முறையாக கேரள மாநிலத்தில் விவசாயிகள் நல நிதி வாரியம் அமைப்பு!
பி.எம் கிசான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 42,000 கிடைக்கும்
தரமான விதைகள் மூலம் அதிக மகசூல் பெறலாம் - விவசாயிகளுக்கு விதை பரிசோதனை அலுவலர் அறிவுரை
Share your comments