அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. அனைத்து வகையான மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஓய்வூதிய விதிகளில் மத்திய அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது.அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய விதிகள் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும். எந்த விதிகளில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.
முன்னர் PFRDA விதிகளை தளர்த்தியது
ஜனவரி 1, 2023 முதல், அரசு ஊழியர்கள் தங்கள் நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுக்க, தங்களது நோடல் அலுவலகங்கள் மூலம் மட்டுமே கோரிக்கை விடுக்க முடியும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) கொரோனா தொற்றுநோய்களின் போது விதிகளை தளர்த்தியது. அதன் கீழ் என்பிஎஸ்-இன் கீழ் தானியங்கி அறிவிப்பு அனுமதிக்கப்பட்டது.
உத்தியோகபூர்வ தகவல்களின்படி, கொரோனா தொற்றுநோய்களின் போது மக்களின் வசதிகளை மனதில் கொண்டு விதிகள் தளர்த்தப்பட்டன. ஆனால் இப்போது நிலைமை இயல்பாகியுள்ளதால், அரசாங்கத் துறையின் பங்குதாரர்கள் தங்கள் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நோடல் அலுவலகங்கள் மூலமே அனுப்ப வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதியத்திற்கு எதிர்ப்பு
இந்த நேரத்தில் புதிய ஓய்வூதிய முறைக்கு எதிராக நாட்டில் பல வித எதிர்ப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பழைய ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என மாநில ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த திட்டத்தில் தங்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இல்லை என பல மாநிலங்களின் மத்திய ஊழியர்கள் நம்புகின்றனர். 2004-ம் ஆண்டு மத்திய அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், வரி செலுத்துவோருக்கு பெரும் நிம்மதியை அளித்து வருமான வரித்துறை சமீபத்தில் வரிவிலக்கு அளித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, இனி வரி செலுத்துவோர் சிகிச்சைக்காக பெறும் தொகைக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, இந்தத் தொகைக்கு நீங்கள் வரி செலுத்த வேண்டியதில்லை.
மேலும் படிக்க
TNPSC குரூப் 4: கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு!
பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்? ரேஷன் கடைகளில் மாற்றம் வருமா?
Share your comments