நாட்டின் தலைநகர் டெல்லியில் இந்தியப் பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுவர்.
இவ்வாறு, ஒவ்வொரு வருடமும் இந்திய குடியரசு தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இம்முறை இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கொண்டாட்டத்திற்காக, டெல்லியில் உள்ள, இந்தியா கேட்டை சுற்றி, இரண்டு கிலோமீட்டர் வரை, வாகனங்கள் உள் வர தடை விதிக்கப்படும். இந்நிலையில், கடந்த மாதம் இறுதி வாரம் தொடங்கி, இம் மாதம் இறுதி வரை, வாகனங்கள் உள் செல்ல அனுமதிக் கிடையாது.
ஒவ்வொரு வருடமும், கடும் பனிப்போழிவிலும், மக்கள் குடியரசுத் தினத்தை கொண்டாட, மற்றும் ராணுவ அணிவகுப்பைக் காண ராஜப் பாதையில் திறல்கின்றனர். எனவே அதிக அளவில் மக்கள் பார்வையிடுவதற்காக, இந்த கொண்டாட்டம் மற்றும் அணிவகுப்பை, குடியரசு தினத்திற்கு முன்னதாகவே, இரண்டு நாள் ஒத்திகை நடைபெறும். இதற்கும், மக்கள் திறலாக வந்து, பார்வையிடுவர் என்பது குறிப்பிடதக்கது. இந்த நாளில், கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களையும் விருதுகளையும் குடியரசுத் தலைவர் தன் கரங்களால் வழங்கி கௌரவிப்பார்.
இதைத் தொடர்ந்து, குடியரசு தின கொண்டாட்டம் ஒத்திகை ஜனவரி 24 முதல் தொடங்கும். ஆனால், இந்த வருடம் இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இனி ஜனவரி 24க்கு பதில் ஜனவரி 23 முதல் குடியரசுத் தின கொண்டாட்டம் தொடங்கும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
ஏனேன்றால், சுபாஷ் சந்திரபோஸ், ஆங்கிலயர் ஆட்சியிருக்கும்போது, தனது அயராது உழைப்பால், இந்திய ராணுவத்தை வழி நடத்தியவர், அவரது பிறந்த நாளை முன்னிட்டு மற்றும் அவருக்கு மறியாதை செய்யும் விதமாக, இந்த குடியரசுத் தின கொண்டாட்டம் (ஜனவரி 23) அன்று துவங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் படிக்க:
ஜல்லிக்கட்டு: காளை பிடிபட்டதால் விரக்தி, காளையுடன் வெளியேறிய இளம்பெண்!
சர்க்கரை உற்பத்தியின் மற்றொரு வழி: ஏழு ஆண்டுகளுக்கு அறுவடை செய்யலாம்
Share your comments