மாநிலம் முழுவதும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசின் நிதித்துறை அதிரடியாக வெளியிட்டுள்ளது. தற்போது இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.
ஓய்வு பெறும் வயது (Retirement Age)
தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. ஊழியர்களுக்கான பென்ஷன் நிலுவை தொகை உள்ளிட்டவைகளை வழங்க தாமதம் ஆவதால், அடுத்த இரண்டு வருடத்திற்கு அரசு ஊழியர்களின் பதவி காலம் நீட்டிக்கப்படுவதாக அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், இது குறித்து அதிரடி அறிவிப்பு ஒன்றை கேரளா அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சில நிறுவனங்கள் இதை மாற்றி அமைத்திருந்தது.
பல்வேறு கமிட்டி மற்றும் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்படுவதாக மாநில நிதித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க
பழைய பென்சன் திட்டத்தில் புதிய பிரச்சனை: அச்சத்தில் அரசு ஊழியர்கள்!
Share your comments