பொங்கல் பண்டிகை சமயத்தில் காய்கறிகளுக்கான தேவை அதிகமாக இருந்தது. அதனால் காய்கறிகளின் விலை சற்று அதிகமாக காணப்பட்டது. ஆனால் இந்த வாரத்தில் காய்கறிகளின் விலை ஓரளவுக்குக் குறைந்து வருவதை பார்க்க முடிகிறது. இன்று தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை, மொத்த சந்தையான கோயம்பேடு சந்தையில் குறைந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று (ஜனவரி 21) ஒரு கிலோ தக்காளி விலை 23 ரூபாயாகக் குறைந்திருக்கிறது. நேற்று 30 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது, குறிப்பிடதக்கது. வெங்காயம் விலை 32 ரூபாயிலிருந்து ஒரு ரூபாய் உயர்ந்து, 33 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அவரைக்காய் விலை பாதியாகக் குறைந்து 30 ரூபாய்க்கும், பீன்ஸ் விலையும் 45 ரூபாயிலிருந்து 35 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. அதே நேரம், ஒரு கிலோ கேரட் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடதக்கது. மேலும், பல காய்கறியின் விலைப் பட்டியல் தெரிந்துக்கொள்ள கீழே சென்று பார்வையிடவும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சாதரண நாட்களை விட காய்கறி விலை உயர்ந்திருந்தாலும், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு காய்கறி விலை குறைந்தே காண்ப்பட்டது, குறிப்பிடதக்கது. அந்த வகையில் பண்டிகையின் நாட்களை கடந்து, ஒரு வாரமே ஆன நிலையில், இன்று மொத்த சந்தையின் காய்கறி விலை குறைந்திருக்கிறது. இது மக்களை மகிழ்ச்சியடையே செய்திருக்கிறது. மேலும் காய்கறி விலை நிலவரம், இதோ,
காய்கறி விலை நிலவரம்!
- தக்காளி - 23 ரூபாய்க்கும்
- வெங்காயம் - 33 ரூபாய்க்கும்
- சின்ன வெங்காயம் - 90 ரூபாய்க்கும்
- அவரைக்காய் - 30 ரூபாய்க்கும்
- பீன்ஸ் - 35 ரூபாய்க்கும்
- பீட்ரூட் - 60 ரூபாய்க்கும்
- வெண்டைக்காய் - 40 ரூபாய்க்கும்
- நூக்கல் - 23 ரூபாய்க்கும்
- உருளைக் கிழங்கு - 18 ரூபாய்க்கும்
- முள்ளங்கி - 12 ரூபாய்க்கும்
- புடலங்காய் - 20 ரூபாய்க்கும்
- சுரைக்காய் - 20 ரூபாய்க்கும்
- பாகற்காய் - 35 ரூபாய்க்கும்
- கத்தரிக்காய் - 15 ரூபாய்க்கும்
- குடை மிளகாய் - 30 ரூபாய்க்கும்
- கேரட் - 70 ரூபாய்க்கும்
- காளிபிளவர் - 30 ரூபாய்க்கும்
- சவுசவு - 10 ரூபாய்க்கும்
- தேங்காய் - 28 ரூபாய்க்கும்
- வெள்ளரிக்காய் - 10 ரூபாய்க்கும்
- முருங்கைக்காய் - 160 ரூபாய்க்கும்
- இஞ்சி - 30 ரூபாய்க்கும்
- பச்சை மிளகாய் - 35 ரூபாய்க்கும்
- கோவைக்காய் - 25 ரூபாய்க்கும்
இந்த விலை பட்டியல் மொத்த சந்தையான கோயம்பேடு சந்தையனுடையது. எனவே சில்லறை விற்பனையாளர்களின் விலையில், இது எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
Share your comments