பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் கீழ் 13வது தவணையான பிஎம்-கிசான் நிதியை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பயனாளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியமாகும்.
13 வது தவணை குறித்து, இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், பதிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இந்த மாத இறுதிக்குள், அதாவது பிப்ரவரி 28 -க்குள் முதல் மார்ச் முதல் வாரத்திற்குள் ரூ. 2,000 வரவு வைக்கப்படும் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) யோஜனா (திட்டம்) கீழ், மத்திய அரசு சிறு மற்றும் குறு விவசாயி குடும்பங்களுக்கு மூன்று சம தவணைகளில் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 6,000 வருமான ஆதரவை வழங்குகிறது. மாநிலங்களும் யூடி நிர்வாகமும் தகுதியுள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு நிதியை (ரூ 2000) ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுகின்றன.
PM-KSNY தவணையை எவ்வாறு சரிபார்க்கலாம்:
- PM-KSNY pmkisan.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
- ‘விவசாயிகளின் மூலை பிரிவு ( Farmers Corner Section) என்பதைக் கிளிக் செய்யவும்.
- 'பயனாளி நிலை' ( Beneficiary Status ) விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
- விவசாயிகள் தங்கள் விண்ணப்ப நிலை மற்றும் அவர்களின் பெயர் மற்றும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள தொகையை சரிபார்க்கலாம்.
மேலும் படிக்க:விதைப் பண்ணை அமைக்க அரசின் மானியம் இதோ!
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர் மற்றும் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்:-
- PM கிசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் https://pmkisan.gov.in/
- வலது பக்கத்தில் 'விவசாயிகளின் மூலையில்' (Farmers Corner) செல்லவும்
- இங்கே 'பயனாளி பட்டியல்' (Beneficiary List) விருப்பத்தை கிளிக் செய்யவும்
- ஒரு புதிய பக்கம் திறக்கும்
- உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராம விவரங்களை நிரப்பவும்.
- இதற்குப் பிறகு அறிக்கையைப் பெறு (Get Report) என்பதைக் கிளிக் செய்யவும். இங்கே நீங்கள் பயனாளிகளின் முழுமையான பட்டியலைப் பெறுவீர்கள்.
13 வது தவணை வழங்குவதற்கு முன் தவறுகளை சரிசெய்ய படிப்படியான வழிகாட்டி கீழே பின்வருமாறு:
- PM கிசானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் https://pmkisan.gov.in/
- விவசாயி மூலையில் தட்டவும்.
- ஆதார் விவரங்களைத் திருத்து விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- ஆதார் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
- பெயரில் தவறு இருந்தால் திருத்திக் கொள்ளவும்.
- மற்ற தவறுகளை சரிசெய்ய உங்கள் கணக்காளர் மற்றும் விவசாய துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
உங்கள் ஆதார் எண், கணக்கு எண் மற்றும் மொபைல் எண்ணை ஹெல்ப் டெஸ்க் விருப்பத்தின் மூலம் உள்ளிட்ட பிறகு, பிற தவறுகள் இருந்தால் திருத்தவும்.
மேலும் படிக்க:
Share your comments