ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை பெருக்கெடுத்து இருப்பதால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஓசூரில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் இரசாயனம்
கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் தற்போது 40 அடிக்கு மேல் இருப்பு உள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 1060 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்நிலையில், திடீரென தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை பெருக்கெடுத்து துர்நாற்றத்துடன் செல்வதால் பரபரப்பு நிலவுகிறது. ரசாயன நுரை பெருக்கெடுத்து இருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் தண்ணீரில் அம்மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலக்கப்பட்டு இருக்கலாம் என்றும் ஐயம் தெரிவிக்கின்றன.
விவசாயிகள் கோரிக்கை
தொடர்ந்து 2 வாரங்களாக தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை பெருக்கெடுத்த நிலையில் அரசு அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஓசூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க
PM கிசான் 13வது தவணை எப்போது? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
கரும்பு விவசாயத்தில் கால்தடம் பதித்த போர் விமான தயாரிப்பு பொறியாளர்!
Share your comments