1. செய்திகள்

சென்னை சென்ட்ரல் நிலையம் பெயர் மாற்றம் - பொது மக்கள் குழப்பம்

KJ Staff
KJ Staff

சென்னைக்கென்று பல புராதன அடையாளங்கள் உண்டு. பெரும்பாலான கட்டிடங்கள் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு  இன்றும் தலை நிமிர்த்து நிற்கிறது. தென்னக இரயில்வேயின் தலைமை இடமாகவும் திகழ்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க சென்னை சென்ட்ரல் நிலையத்தின் பெயர்  தற்போது "புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்" என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேண்டுகோளை தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் பிரதமரிடம் வைத்தார். வேண்டுகோளை ஏற்று மத்திய உள்துறை  அமைச்கசகத்துடன் கலந்தாலோசித்து ஒப்புதல் அளித்தது.

மக்கள் கருத்து

சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து தினமும் நுற்றுக்கணக்கான்  இரயில்களும், லட்சக்கணக்கான மக்களும் பயணிக்கிறார்கள்.அவர்களில்  வெகு சிலரே இந்த பெயர் மாற்றத்தை வரவேற்கின்றனர். பெரும்பாலான மக்கள் இந்த  மாற்றத்தை  ஏற்கவில்லை. எம்.ஜி.ஆர் அவர்களின் பெருமையை பறைசாற்ற பலவழிகள் உள்ளன.ஆனால் இந்த பெயர் மாற்றம் மற்ற மாநிலத்தவருக்கும், வெளிநாட்டவருக்கும்  உச்சரிக்கம் போது சற்று கடினமாக உள்ளது என்கின்றனர். எனவே ,தமிழக அரசு மக்களின் மன ஓட்டத்தை கருத்தில் கொண்டு பெயர் பலகை மற்றும் பணியினை தொடர வேண்டும்.

English Summary: Chennai Central Renamed as MGR Railway Station

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.