கொரோனா மூன்றாம் அலை (Corona 3rd wave) வருவதற்கான வாய்ப்புகளும், சாத்தியக் கூறுகளும் இந்தியாவில் நிலவி வரும் நிலையில் சென்னை மாநகராட்சி ”வருமுன் பாதுக்கும்” நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கோடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வரும் சென்னை மாநகராட்சி புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
வருமுன் காப்போம்
மே மாதம் மத்தியில் 7500-ஐ தொடும் வகையில் நாள் ஒன்றுக்கு கொரோனா (Corona) தொற்றால் சென்னைவாசிகள் பாதிக்கப்பட்டனர். பல்வேறு தடுப்பு மற்றும் துரித நடவடிக்கைகளால் தற்போது தொற்று எண்ணிக்கை 2000 என்று குறைந்துள்ளது. ஆனாலும் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் தடுப்பது என்பது வெகு தூரத்தில் இருக்கும் இலக்கு. வருங்காலத்தில் இது போன்ற தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று சிவில் ஊழியர்கள் கூறியுள்ளனர். கொரோனா வருமுன், தடுக்கும் நடவடிக்கைகளுக்கான டாஸ்க் ஃபோர்ஸ் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், வருமுன் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
குடிமை அமைப்பு வெளியிட்டுள்ள தினசரி நேர்மறை வழக்குகளின் தரவுகளைப் பார்க்கும்போது, அம்பத்தூர், அண்ணா நகர், தேனம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையார் உள்ளிட்ட ஐந்து மண்டலங்கள் முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் அதிக பாதிப்பை சந்தித்தது. அம்பத்தூர் மற்றும் அண்ணா நகரில் இரண்டாம் அலையில் 5000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. மே 20ம் தேதி அன்று அண்ணா நகரில் 5270 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
நகரத்தின் இந்த 5 பகுதிகள் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட மண்டலங்கள் என்பதை அவர்கள் அறிந்திருப்பதாக, குடிமை அமைப்பில் உள்ள சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார். இங்கு தான் இந்த நகரின் மொத்த மக்கள் தொகையான 78 லட்சம் பேரில் 34 லட்சம் நபர்கள் வசிக்கின்றனர். இந்த மண்டலங்களும் வணிக நடவடிக்கைகளின் மையங்களாக இருந்தன என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மண்டலங்களில் அதிக வணிக நடவடிக்கைகள் இருப்பதால், மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே உள்ளது. இதனால் தொற்றுநோய் வேகமாக பரவுகிறது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க
அதிர்ச்சி ரிப்போர்ட்: கொரோனா நோயாளிகளைத் தாக்கும் தோல் பூஞ்சை நோய்! கர்நாடகத்தில் கண்டுபிடிப்பு
தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு! முதல்வர் உத்தரவு
Share your comments