1. செய்திகள்

உலகின் 100 சிறந்த மருத்துவ கல்லூரிகள் பட்டியலில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி!

R. Balakrishnan
R. Balakrishnan
Chennai Government Medical College

உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி இடம்பிடித்துள்ளது. உலகில் உள்ள சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை உலகின் சிறப்பு வணிக இதழான CEOWORLD இதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் ஹார்டுவேர் மருத்துவக் கல்லூரி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தப் பட்டியலில் முதல் 21 இடங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழங்கள் தான் உள்ளன.

மருத்துவக் கல்லூரிகள் (Medical Colleges)

இந்தியாவைச் சேர்ந்த 5 மருத்துவக் கல்லூரிகள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இதன்படி 21-வது இடத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியும், 37-வது இடத்தில் புனே இந்திய ராணுவ மருத்துவக் கல்லூரியும், 46-வது இடத்தில் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியும், 55-வது இடத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியும், 60-வது இடத்தில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியும் இடம்பிடித்துள்ளன.

இந்த 5 மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் ஒரே மருத்துவக் கல்லூரி சென்னை மருத்துவக் கல்லூரிதான். மீதம் உள்ள 4 மருத்துவக் கல்லூரிகளில் 2 மத்திய அரசாலும், ஒன்று இந்திய ராணுவத்தாலும், ஒன்று சிறுபான்மைக் கல்வி நிறுவனமாகவும் உள்ளது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகள்: 4-வது இடத்தில் இந்தியா!

நாம் ஏன் சப்போட்டா பழத்தை சாப்பிட வேண்டும்?

English Summary: Chennai Government Medical College in the list of 100 best medical colleges in the world! Published on: 17 April 2022, 12:25 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.