வறட்சி பகுதியான ராதாபுரத்தில், நீர் உள்வாங்கும் அதிசய கிணறுகளை ஒன்றிணைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் ஆய்வை, சென்னை ஐ.ஐ.டி., தொழிற்நுட்ப குழுவினர் மேற்கொள்கின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் வறட்சியான தொகுதி ராதாபுரம். வெள்ள காலங்களில் மட்டுமே நீர்வரத்து இருக்கும். இருப்பினும் ராதாபுரத்தின் தேரிப்பகுதிகள் ஆண்டு முழுவதும் செழிப்பாக உள்ளன. வடகிழக்கு பருவ மழையின் போது, 2021 டிசம்பரில் திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் ஒரு கிணற்றில் வாரக் கணக்கில் மழை நீர் கால்வாய் மூலம் நீர் சென்றாலும் கிணறு நிரம்பவில்லை. அந்த கிணற்றின் ஆழத்தில் பக்கவாட்டில் பெரிய குகைகள் உள்ளன.
அதிசய கிணறு (Miracle wells)
சுண்ணாம்பு பாறைகளால் இந்த குகைகள் இணைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. கலெக்டர் விஷ்ணு ஆலோசனையின் படி, சென்னை ஐ.ஐ.டி., சிவில் இன்ஜினியரிங் பிரிவு டாக்டர் வெங்கட்ராமன் தலைமையில் குழுவினர், 260க்கும் மேற்பட்ட கிணறுகளை ஆய்வு செய்தனர். அங்கு 22 புதிய கிணறுகள் தோண்டப்பட்டன. அதில், 1,000 ஆண்டுகள் பழமையான குகைகள், குகைகளின் நிலத்தடி நீரோட்டம் ஆகியவை மூலம் எப்போதாவது பெய்யும் மழையை சேகரித்து வறட்சியிலும் செழிப்பை தருவது தெரிந்தது.
மேலும், ஆயன்குளம், கீரைக் காரன்தட்டு, சாத்தான்குளம், சுவிசேஷபுரம், இடைச்சிவிளை போன்ற இடங்களில், 16 கிணறுகளில் இத்தகைய நீரோடைகள் உள்ளதும் ஆய்வில் தெரியவந்தது. அதிசய கிணற்றை ராதாபுரம் எம்.எல்.ஏ.,வான சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் ஐ.ஐ.டி., வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கும் 'ட்ரோன்' கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.'வடகிழக்கு பருவ மழைக்கு முன் குகைகளை இணைத்து 200 சதுர சதுர கி.மீ.,க்கு தண்ணீரை கொண்டு செல்ல முடியும்.
கடற்கரையை ஒட்டியுள்ள வறட்சி பகுதிகளில் கடல் உப்பு நீரின் பாதிப்பையும் குறைக்க முடியும்' என வெங்கட்ராமன் கூறினார்.தாமிரபரணி ஆற்றில் வெள்ள காலங்களில் வீணாக செல்லும் நீரை இந்த கிணற்றுக்கு பயன்படுத்த திட்டம் உள்ளது. இந்த ஆய்வு திட்டத்திற்கு கூடங்குளம் அணுமின் நிலையம் நிதி வழங்கியுள்ளது
மேலும் படிக்க
2 ஆண்டுகள் சம்பளம் வாங்காத முகேஷ் அம்பானி: காரணம் இது தானாம்!
Share your comments