1. செய்திகள்

சென்னை விஜிபி மரைன் கிங்டம்

KJ Staff
KJ Staff

சென்னையில்  விஜிபி பூங்கா  அருகில் இந்த விஜிபி மரைன் கிங்டம் அமைக்கப் பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மீன்வள சுரங்கமாகும். விஜிபி குழுவினால் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் மற்றும் கவர்ச்சிகரமான மீன்வள சுரங்கம்.

நீருக்கடியிலான  மீன்வள சுரங்கப்பாதை கருவி, திரையரங்கு, உணவு மையம், மற்றும் கடல்சார் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. நீருக்கடியில் சுரங்கம், நகரும் நடை பாதை, மற்றும் சுரங்கத்திற்குள் உள்ள தூரம் 65ல் இருந்து 70 மீட்டர் வரையிலானது.

உலகெங்கிலும் உள்ள 2000க்கும் அதிகமான மீன் இனங்கள், மற்றும் மீன் தொட்டிகள் பார்வையாளர்கள் தொட்டு உணரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 7,500 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு புதிய கடல் சார் அனுபவத்தை அளிக்கும் வகையில் இந்த நீருக்கடியிலான   மீன்வள  சுரங்கத்தை அமைத்துள்ளன .சுரங்கத்தில் செல்லும் போது பார்வையாளர்கள் நகரும் நடை பாதையை பயன்படுத்தி பல்வேறு வகையான மீன் வகைகளை மிக அருகிலிருந்தது கண்டு களிக்கலாம்.

விடுமுறைகளில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இந்த இடம்  ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் குழந்தைகள் மீன்களைப் பற்றி தெரிந்துகொள்ள சிறந்த இடமாகும். 

 

 

English Summary: Chennai, India VGP Marine Kingdom Published on: 01 May 2019, 06:07 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.