Krishi Jagran Tamil
Menu Close Menu

அரசு பள்ளி மாணவர்களுக்கு பயோமெட்ரிக் அறிமுகம்: ஜூன் முதல் வாரத்தில் நடைமுறை படுத்தப்படும்.

Wednesday, 01 May 2019 04:20 PM

தமிழக பள்ளி கல்வி துறை வரும் ஜூன் மாதம் முதல், அதாவது வரும்  கல்வி ஆண்டில்  பயோமெட்ரிக்  வருகை பதிவேட்டினை மாணவர்களுக்கு அறிமுக படுத்த உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் இம்முறை அறிமுகப்படுத்த படும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பயோமெட்ரிக்  வருகை பதிவேட்டினை  ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதில் பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லது அனைத்து பணியாளர்களும்  பயோமெட்ரிக் மூலம் தங்களின் வருகை பதிவினை உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையை அனுப்பி இருந்தது. பணியாளர்களின் வருகை பதிவினை நெறி படுத்தவும், கண்காணிக்கவும் இதனை கட்டாயமாக்கியது.

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போதிய பயிற்சி,  நவீன வசதிகள், முறையான பராமரிப்பு  இல்லாததாலும் இதனை பெரும்பாலான பள்ளிகளில் செயல் படுத்த முடியவில்லை. தற்போது இதில் போதிய  மாற்றங்களை செய்து மீண்டும் செயல் படுத்த உள்ளது.  இதற்கான சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 7000 அதிகமாக உள்ளன. ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பயிற்சி நிறைவடைந்த நிலையில் இந்த புதிய வருகை பதிவேட்டு முறையினை பள்ளி மாணவர்களுக்கு அறிமுக படுத்த உள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதலினை முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

TN Govt School Govt Aided Teachers Students Attendance
English Summary: Tamil Nadu Educational Department Has introduced Biometric system for students

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. விடை பெறத் துவங்கியது தென்மேற்குப் பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!
  2. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரிசி கொள்முதல் - அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு !
  3. ரூ.174 கோடி செலவில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம்! அக்1 முதல் திருச்சியில் தொடக்கம்!
  4. கொரோனா பரவலால் மூடப்பட்ட, கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டது! மகிழ்ச்சியில் வியாபாரிகள்!
  5. எருதுகளை செல்லமாகக் கொஞ்சி வேலைக்குப்பழக்குவது எப்படி? புதிய யுக்திகள்!
  6. பூச்சிகளை விரட்டியடிக்கும் தாவரப் பூச்சிக்கொல்லிகள் - தயாரிக்கலாம் வாங்க!
  7. முளைப்புத்திறனை அதிகரிக்க விதை சுத்திகரிப்பு மிக அவசியம்!
  8. எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை கொட்டும் - விபரம் உள்ளே!!
  9. தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு, மதுரை ஐகோர்ட்டின் அசத்தலான அறிவுரை! இனி சாலை விரிவாக்கத்துக்கு மரங்களை வெட்டக்கூடாது!
  10. வாழையின் விலை வழக்கத்தைப் போல நிலையாக இருக்கும்- TNAUவின் கணிப்பு!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.