தமிழகம் மற்றும் புதுவையில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய வங்கக் கடல் மற்றும் தென் வங்கக் கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் திடீரென மேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி அருகே சிங்கிபுரம், விலாரிபாளையம், சோமபட்டி உள்ளிட்ட இடங்களில் பெய்த பரவலான மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, கே.ஜி.கண்டிகை உள்ளிட்ட இடஙக்ளில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதே போல் நாமக்கல், அரக்கோணம், அந்தியூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த நல்ல மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வேதாரண்யத்தில் கனமழை
வேதாரண்யம் மற்றும் அதன் சுற்ற வட்டார இடஙக்ளில் கனமழை பெய்து வருகிறது. தேத்தாக்குடி, நெய்விளக்கு, கரியாப்பட்டிணம் உள்ளிட்ட இடங்களில் கடந்த 9 மாதமாக இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்ஸியஸ், குறைந்த பட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்ஸியஸ் பதிவாக கூடும்.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments