1. செய்திகள்

இஸ்ரேல் மற்றும் ரிவுலிஸ் நிறுவனம் இணைந்து சொட்டு நீர் பாசனதற்கு புதிய செயலி

KJ Staff
KJ Staff
Manna App

விவசாகிகளை மகிழ்விக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடுப்புகள், தொழில்நுட்பங்கள், செயலிகள் சந்தையில் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் ரிவுலிஸ் நீர்ப்பாசன நிறுவனம், மன்னா என்னும் செயலியை அறிமுக படுத்தி உள்ளது.

இஸ்ரேலின் நுண் நீர்ப்பாசனத்தை அடிப்படையாக கொண்டு ரிவுலிஸ் நிறுவனம் செயற்கை கோள் மூலம் செயல்படும் செயலியை விவசாகிகளுக்காக வடிவமைத்துள்ளனர். இந்த செயலி நீர்ப்பாசனம் மற்றும் நீர் மேலாண்மையை திறம்பட கையாளுவதற்கு பயன்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் நிலவிவரும் நீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு அந்தந்த இடத்தின் நீர்வளம், காலநிலை, இவ்வயனைதையும் கணக்கிட்டு சரியானவற்றை இந்த செயலி பரிந்துரைக்கும். தற்போது இந்த நிறுவனம் மகாராஷ்டிரா, கர்நாடக, குஜராத், உத்திர பிரேதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் செயல்பட உள்ளது.

Manna App

முதல் கட்டமாக பருத்தி, கரும்பு, மாதுளை, திராட்சை, தக்காளி போன்றவைகளின் மீது  செயல்  பட உள்ளது. பின்னர் மற்ற பயிர்களின் மீது பயன்படுத்த உள்ளனர்.  இந்த தொழில் நுட்பமானது, 5 sq கி.மி  நிலப்பரப்புக்கு தேவையான நீர் பாசனம்,  எப்போது செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், நீர் ஆவியாகுதல் போன்ற பதிவுகளை மிகவும் துல்லியமாக தரவல்லது.

விவசாகிகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் நீர் பாசனமும் ஒன்று. ஒவ்வொரு பயிருக்கும் நீரின் தேவை மாறுபடும். இருப்பினும் எல்லா விதமான  பயிருக்கும் போதுமான அளவு நீர் கிடைப்பதில்லை. மன்னா என்னும் இந்த செயலி அறிவியல் ரீதியாக விடையளிக்கிறது. எதிர் வரும் காலங்களில் பயிர்களுக்கு தேவைப்படும் நீரின் அளவு போன்றவற்றை விவாசகிகள் முன்பே அறிவதால் அவர்களுடைய இழப்பு தடுக்கப் படுகிறது, என அதன் இயக்குனர் கூறினார். 

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Rivulis Irrigation Launches of “Manna App" for Indian Farmers

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.