தமிழகத்தை பொறுத்த வரை வட மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசக்கூடும். அதே போன்று சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நாகை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. எனினும் வெயிலில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை என ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 41 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகக் கூடும். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லவதை தவிர்க்கும் படி கேட்டு கொண்டுள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் வேலூர் மாவட்டத்தில் நேற்று 4 செ.மி. மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே போன்று கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியினை ஒட்டியுள்ள பகுதிகளான ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான முதல் கனமான மழை பெய்து வருகிறது.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments