Chief Minister M. K. Stalin's announcement that customs fees will not be collected from tomorrow in Navalur!
நாவலூர் சாலையில் நாளை முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் அரசுத் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நான்கு மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து இரண்டாவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. 28 துறைகளை சார்ந்த மாவட்ட அதிகாரிகளும் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் சென்னை ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், நாவலூர் சாலையில் நாளை முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
தெளிப்புநீர் அல்லது மழைத்தூவான் பாசனம் அமைக்க 7 ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை!
Share your comments