1. செய்திகள்

மேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

R. Balakrishnan
R. Balakrishnan
MK Stalin
Credit : Patrika

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) இன்று தண்ணீர் திறந்து வைத்தார். இதனால், 5.12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். தற்போது வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு மாலைக்குள் 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும்.

டெல்டா பாசனம்

மேட்டூர் அணையின் (Mettur Dam) மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ல் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். அதற்கு, அணையில் குறைந்த பட்சம், 90 அடிக்கு மேல் தண்ணீர் இருக்க வேண்டும். நேற்று, அணை நீர்மட்டம், 96.80 அடியாக இருந்தது.

மேட்டூர் அணை திறப்பு

இதனால், டெல்டா குறுவை சாகுபடிக்கு, இன்று காலை 11.20 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்து மலர் தூவினார். நிகழ்ச்சியில் நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிடோர் பங்கேற்றனர்.

Mettur Dam
Credit : Maalai Malar

உணவு உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். குறிப்பிட்ட நாளில் மேட்டூர் அணையை திறப்பதன் மூலம் சரியான காலத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்கிறது. மேலும் ஜூன் 17-ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணியில் இருந்து 18-வது முறையாக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீர் 7 முதல் 10 நாட்களில் கடைமடை பகுதியை சென்றடையும். ஜூன் மாதம் சரியான நேரத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும், கடைமடை வரை பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணி நடப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

மேலும் படிக்க

3 விதமான சலுகைகளில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தலாம்!அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

புதுப்பொலிவுடன் காட்சி தரும் மேட்டூர் அணை! நாளை தண்ணீர் திறப்பு!

 

 

English Summary: Chief Minister MK Stalin opened the Mettur dam! Published on: 12 June 2021, 12:29 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.