முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மனுக்கள் பெறும் திட்டம் (Scheme for receiving petitions)
தமிழக முதலமைச்சரும், திமுகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நேரடியாக மக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றார்.
வாக்குறுதி (Promise)
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மனுக்கள் பெறப்பட்டு, திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆட்சிக்கு வந்ததும் (When he came to power)
அதன்படி தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு, பொது மக்கள் அளித்த மனுக்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இணையதளம் வாயிலாகத் தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் தனிப்பிரிவு (Private Division of the Chief Minister)
இதன் தொடர்ச்சியாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறுவதற்காக முதலமைச்சரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது.
இந்தத் தனிப்பிரிவுக்கு வரும் மனுக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு இணையதளம் வாயிலாகவும் மனுக்கள் பெறப்படுகின்றன.
நேரடியாக மனுக்கள் (Petitions directly)
இந்நிலையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுமுதல், பொது மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திட்டம் துவக்கம் (Project Launch)
இதன்படி காலை 10 மணியளவில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சரின் அலுவலகத்தில், தமிழக முதல்-அமைச்சர் நேரடியாகவே பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிய இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ரூ.4,000 கொரோனா நிவாரணம் வழங்கும் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!
இவர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரணம் கிடையாது, தமிழக அரசின் அதிர்ச்சித் தகவல்!
Share your comments