1. செய்திகள்

ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமல்: ஜூலை 19 வரை ஊரடங்கு.

T. Vigneshwaran
T. Vigneshwaran

Tamil Nadu Lockdown

புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.புதிய தளர்வுகளில் அணைத்து கடைகளும் இரவு 9 மணி வரை செயல்படும். மேலும் தமிழகம்-புதுச்சேரி இடையே பஸ் சேவையும் தொடங்குகிறது.

கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது என்பதால் ஒன்றிய அரசு ஊரடங்கை அறிவித்தது,கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கொரோனா தொற்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு போதுமான நடவடிக்கைகளை அறிவித்து பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளது. இதை தொடர்ந்து பல வகையான தளர்வுகள் கூடிய ஊரடங்கு அவ்வப்போது  தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணி முதல் முடிவுக்கு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கொரோனா பரவலை'கண்காணித்து கட்டுப்பாட்டுக்கான அவசியத்தை புரிந்து மீண்டும் பல வகையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 19 ஆம் தேதி வரை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நீட்டித்துள்ளர்.

புதிய தளர்வுகள் அடிப்படையில் ஜூலை 19 வரை மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து சேவைகள் இன்னும் அனுமதிக்கவில்லை.திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டம்,பள்ளிகள்,கல்லூரிகள் திறக்க தடை தொடர்கிறது. மேலும் அண்டை நாடான புதுச்சேரிக்கு போக்குவரத்து இன்று காலை முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு வேலைக்கான எழுத்து தேர்வு நடத்த அனுமதி வழங்ப்பட்டுள்ளது.

உணவகம், டீ கடை, பேக்கரி,இனிப்பு காரவகை தின்பண்டங்கள் வீரப்பனை கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் கை சுத்தகரிப்பான்கள் அவசியம் வைத்திருக்க வேண்டும்,மற்றும் உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்,கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க தவிர்க்கவும் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு விதிமுறைகளை மீறுவோர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெறுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிக்க மாநிலங்களுக்கு உத்தரவு!

ஊரடங்கு நீட்டிப்பில் எவற்றுக்கெல்லாம் தடை?

English Summary: New relaxation of curfew in effect: Curfew till July 19.

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.