1. செய்திகள்

ஜூலை 18 அன்று ‘தமிழ்நாடு தினம்’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !!

T. Vigneshwaran
T. Vigneshwaran

Chief Minister MK Stalin's announcement on 'Tamil Nadu Day' on July 18

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் அனைத்தும் பிரிக்கப்பட்டன. அதன்படி அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டன.

2019 முதல் நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போது இருந்த அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்ற பலதரப்பிலும் நவம்பர் 1-ம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவு கூரும் வகையில் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணா 1968-ம் ஆண்டு ஜூலை 18-ம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்த படுகிறது

பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

SBI வாடிக்கையாளர்கள் ரூ.2 லட்சம் இலவசமாகப் பெறுவார்கள்

நவம்பர் மாதத்தில் 17 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது! ஏன்?

English Summary: Chief Minister MK Stalin's announcement on 'Tamil Nadu Day' on July 18 !!

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.