வடகிழக்கு பருவ மழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார்.
தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில். பருவ மழையை எதிர்கொள்ள, மாநிலம் முழுவதிலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்காக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில், தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில், பருவ மழையின் போது பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்த செயல்பட்டை, அனைத்து துறை செயலர்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரைகள் கொடுக்கப்பட்டன. கடந்த சில தினங்களாக, மழை நீர் வடிகால் துாய்மை பணி முகாம் மாநிலம் முழுதும் நடந்து வருகிறது.
வடிகால்களில் தேங்கியுள்ள குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு வடிகால்கள் சரிசெய்யப்படுகின்றன. பருவமழையின் போது தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அங்கு தண்ணீர் தேங்குவதை தடுக்கவும், தண்ணீர் தேங்கினால், உடனடியாக வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பருவ மழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைளை, இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அனைத்து துறை செயலாளர்களும் பங்கேற்கும், ஆய்வு கூட்டம் நடக்கவுள்ளது. அந்த கூட்டத்தில், முன்னெச்செரிக்கை ஏற்படுக்கான விபரங்களை கேட்டறிவதுடன், முக்கிய ஆலோசனைகளை முதல்வர் அளிக்கவுள்ளார்.
மேலும் படிக்க:
கொரோனாவுக்கு பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50,000: மத்திய அரசு தகவல்!
ஸ்டாலின் அளித்த விடியல்! 2,120.54 கோடி முதலீட்டில் 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு!
Share your comments