1. செய்திகள்

சென்னையை சிங்கப்பூராக மாற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் சிங்கார சென்னை 2.0 திட்டம்

KJ Staff
KJ Staff

அதிமுக அரசு புறக்கணித்த வந்த சிங்காரச் சென்னை திட்டம், மீண்டும் புதுப்பொலிவுடன் ‘சிங்கார சென்னை 2.0’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மேயராக பதவி வகித்த காலத்தில் ​ ‘சிங்காரச் சென்னை’ திட்டத்தை தொடங்கினார். அதன் பிறகு, தமிழகத்தில் அதிமுக அரசு தொடர்ந்து அமைந்த நிலையில், திமுக வின் இந்த திட்டத்தை கிடப்பில் வைத்தது.

 

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கான முதல் ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. முதல் கட்ட ஆய்வு கூட்டத்தின் போது சுகாதாரம், உள்கட்டமைப்பு, பொழுதுபோக்கு உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் 25 திட்டங்களை வருகின்ற இரண்டு வருடங்களுக்குள் முடித்து மக்களுக்கு பயன் தரும் வகையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கான முதல் ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. முதல் கட்ட ஆய்வு கூட்டத்தின் போது சுகாதாரம், உள்கட்டமைப்பு, பொழுதுபோக்கு உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் 25 திட்டங்களை வருகின்ற இரண்டு வருடங்களுக்குள் முடித்து மக்களுக்கு பயன் தரும் வகையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

இதில் ‘Project Blue’ முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நீருக்கு  அடியில் மீன்வளம் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கான அக்வா மண்டலங்கள் அமைக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை முகப்பு வளர்ச்சி திருவொற்றியூர் மற்றும் உத்தண்டி உள்ளிட்ட பல இடங்களில் செயல்படுத்தப்படும். இதில், 21.6 கி.மீ. பவளப்பாறைகளின் தலைமுறைக்கு பயோராக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளும் கடற்கரையை பார்க்கும் தளங்கள் கடற்கரைகளில் உருவாக்கப்படும்.

மேலும், சென்னை மெரினா கடற்கரையில் நிறுவபட்டிருக்கும் நம்ம சென்னை போன்று சென்னைக்கு  புதிய அடையாளங்கள் உருவாக்குதல் மற்றும் பழமையான கட்டிடங்கள் பாதுகாத்தல் உள்ளிட்டவை குறித்த திட்டங்கள் இந்த சென்னை 2.0 திட்டத்தில் இடம் பெற உள்ளன. முதல் ஆலோசனை கூட்டத்தில்  சென்னை ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் உதவி ஆணையர்கள் கல்வி சுகாதார உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகள்  இதில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க:

அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படுமா?விரைவில் அறிவிப்பு!

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை

அரசு பள்ளியில் சேரும் மாணவருக்கு ரூ.1,000 பரிசு- அசத்தும் தலைமை ஆசிரியர்!

English Summary: Chief Minister Stalin's Singara Chennai 2.0 project to transform Chennai into Singapore Published on: 21 June 2021, 04:16 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.