1. செய்திகள்

கொரோனா தொற்றால் குழந்தைகளுக்கு பாதிப்பு மிகக்குறைவு: ஆய்வில் தகவல்!

R. Balakrishnan
R. Balakrishnan
Corona 3rd Wave
Credit : Dinamalar

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், இரண்டாவது அலையின் தாக்கம் சற்றே குறைந்துள்ளது.கொரோனா தொற்றின் 3வது அலை (Third wave of Corona) இந்தியாவில் ஏற்பட்டால் அது குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என்றும், குழந்தைகளை பாதிக்க வாய்ப்பில்லை என்றும் முரண்பட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

ஆய்வு

இந்நிலையில், குழந்தைகள் மீதான கோவிட் வைரஸ் தொற்றின் தாக்கம் குறித்து, இங்கிலாந்தில் லண்டன் பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகம், யார்க் பல்கலைக்கழகம், லிவர்பூல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆராய்ந்து வந்தனர். இந்த ஆய்வு முடிவில், 'குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் கோவிட் வைரசால் தொற்றுநோய் தீவிரம் அடைவதற்கும், இறப்பு நேர்வதற்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது' எனத் தெரியவந்து உள்ளது.

குழந்தைகளுக்கு பாதிப்பு குறைவு

ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் லோர்னா பிரேசர் கூறுகையில், இங்கிலாந்தில் (England) கோவிட் வைரஸ் தொற்று பாதித்த, குழந்தைகள், இளம்வயதினரில் 40 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் சிக்கலான நரம்பு கோளாறுகள் உடையவர்களாக இருந்ததால் இறக்கும் ஆபத்து ஏற்பட்டது. ஆனால், சாதாரணமாக அனைத்து குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் கோவிட் தொற்றால் ஆபத்து மிகக்குறைவுதான் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

1500 ஆக்சிஜன் ஆலைகள் விரைவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் அறிவுறுத்தல்!

கொரோனா தொற்று அதிகரிப்பதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை தகவல்!

English Summary: Children at low risk for corona infection: study Published on: 10 July 2021, 08:10 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.