நடிகர் கார்த்தி நடத்தி வரும் உழவன் பவுண்டேஷன் சார்பில், 2022ம் ஆண்டுக்கான உழவர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் விவசாயத்தில் சாதித்தவர்களுக்கு விருதும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற நடிகர் சூர்யா விவசாயத்தை குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும் என்று தெரிவித்தார்.
குழந்தைகளுக்கும் விவசாயம் (Agriculture for Children)
விவசாயத்திற்காகவும், கிராமத்திற்காகவும் நேரம் ஒதுக்காதது குற்ற உணர்வாக இருக்கிறது. பல விஷயங்களை கற்றுக்கொள்ளும் நாம், உற்பத்தி பற்றி படிப்பதில்லை. அதுபற்றி தெரிந்து கொள்வதும் இல்லை. எனது குழந்தைகளிடம் காய்கறிகள் கிடைக்கும் இடம் பற்றி கேட்டால், சூப்பர் மார்க்கெட் என்று சொல்கின்றனர்.
நமது குழந்தைகளுக்கு விவசாயம் பற்றி அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அவர்கள் தான் இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துக் கொண்டு செல்வார்கள்.
அருகில் உள்ளவர்களிடம் பொருட்களை வாங்க முயற்சிப்போம். நாம் பொருள் வாங்கும்போது, அதில் விவசாயிகளுக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். விவசாயிகள் பெரிதாக சம்பாதிக்கவில்லை. அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை மீண்டும் விவசாயத்திற்குத் தான் பயன்படுத்துகிறார்கள் என்று சூர்யா தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
கூடுதல் அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகையில் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!
யானைகள் உயிரிழப்பைத் தடுக்கும் புதிய திட்டம்: விரைவில் அமலுக்கு வரும்!
Share your comments