கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அச்சத்தின் உச்சம் (The peak of fear)
தமிழகத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோரைக் கொரோனா வைரஸ் தொற்று பாதித்து வருகிறது. இதனால், நமக்கும் வைரஸ் தொற்றிக்கொள்ளுமோ என்ற அச்சத்தின் பிடியில் மக்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள்.
ஊரடங்கு (Curfew)
இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு அமல்படுத்தியுள்ளது.
இதுத்தவிர பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது, முகக்கவசம் அணிவதுக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கு சில நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
மக்கள் குற்றச்சாட்டு
பொதுமக்களுக்கு இத்தனைக் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு, பகல் இரவாகக் கூட்டம் அலைமோதும் டாஸ்மாக் கடைகளை மட்டும் மூடாமல் அரசுக்கு வருமானம் பார்ப்பதிலேயேக் குறியாக இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் டாஸ்மாக் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தைக் கடந்த நிலையில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது என்ன நியாயம்?
டாஸ்மாக் மூடப்படுமா? (Will Tasmac close?)
மக்களின் உயிரைக் காக்கும் பொறுப்பில் உள்ள திமுக அரசு, கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருப்பது கண்டனத்திற்குரியது.
ஆட்சிக்கு வரும் முன் ஒரு நிலைப்பாடு, வந்த பின் ஒரு நிலைப்பாடு என திமுக அரசு செயல்படுகிறது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட வேண்டும். இவ்வாறு எடப்படி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எனவே இந்த விஷயத்தில் ஸ்டாலின் அரசு சிந்தித்துச் செயல்படுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க...
Share your comments