மகளிர் சுய உதவு குழுக்கள், உற்பத்தியாளர், தொழில் குழுக்கள் மற்றும் சமுதாய பள்ளிகளுக்கு ரூ.699.26 மதிப்பில் 6,00,926 பயனாளிகளுக்கு உதவும் நோக்கத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வங்கி ஆகிய நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
நலத்திட்டங்கள்(Welfare schemes:)
- கிராம பகுதிகளில் உள்ள 8,210 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தமிழ்நாடு மாநில கிராம வாழ்வாதார இயக்கத்தின் அடிப்படையில் தலா ரூ.15000 வீதம் ரூ. 12.32 கோடி.
- ஊரக பகுதியில் உள்ள ஏழை எளியவர்களுக்கு தலா ரூ.25,,000 வீதம் ரூ.10.97 கோடி நலிவு நிலை குறைப்பு நிதி
- சுய உதவி கூழு ஒன்றுக்கு தலா ரூ.50,000 வீதம் 13,255 குழுக்களுக்கு ரூ.66.28 கோடி சமுதாய முதலீடு நிதி
- சுய உதவி குழு மகளீர்களுக்கு ரூ.64 லட்சம் நிதியுதவி, கிராமப்புற மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கூடுதல் வருமானம் பெற நாட்டுக்கோழி வளர்ப்பை ஓஊக்கமளிக்க தல 100 நாடு கோழி குஞ்சுகளை வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் 3,936 சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.3.53 கோடி நிதியுதவி
- சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 985 பேருக்கு ரூ.4.98 கோடி
- மற்றும் 43 சிறப்பு சுய உதவி குழுக்களுக்கு ரூ.65 லட்சம் தொழில் தொடங்க வாங்கி கடன் என்று மொத்தம் ரூ.698.86 கோடி நிதியுதவிகளை ஸ்டாலின் அவர்கள் நேற்று பயனாளிகளுக்கு வழங்கினார்.
மாவட்டத்திரு ஒன்று என்ற அடிப்படையில் 23 மாவட்டத்தில் ரூ.17 லடசம் மதிப்பீட்டில் 23 சமுதாய பள்ளிகளையும்முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு 1663 கிராம ஊராட்சிகளில், ஊராட்சி ஒன்றுக்கு 3 அல்லது 4 புழக்கடை கோழி வளர்ப்பு அலகுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், தலைமை செயலாளர் இறையன்பு, துணை செயலாளர் மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க:
Share your comments