சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பசுமை தமிழ்நாடு இயகத்தை இன்று காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இத் திட்டத்தின் நோக்கம் என்ன, மேலும் பதிவை தொடருங்கள்.
தமிழ்நாடு மாநிலம் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 60 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இதில் தற்போது 31 ஆயிரத்து 194 சதுர கிமீ பரப்பளவு (மொத்த பரப்பில் 23.98 சதவீதம்) மட்டுமே பசுமை போர்வை உள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய வனக் கொள்கையின்படி, ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவீதம், அதாவது தமிழகத்தில் 42 ஆயிரத்து 919 சதுர கிமீ பரப்பளவில் பசுமை போர்வை இருக்க வேண்டும்.
இந்த இலக்கை எட்ட தமிழ்நாடு, மேலும் 13 ஆயிரத்து 500 சதுர கிமீ பரப்பளவு (மொத்த பரப்பில் 9 சதவீதம்) பசுமை போர்வையை உருவாக்க வேண்டியுள்ளது. இந்த இலக்கை அடுத்த 10 ஆண்டுகளில் எட்டுவதற்காக 'பசுமை தமிழ்நாடு' இயக்கம் தொடங்கப்படும் என்று நடப்பாண்டு மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான நிர்வாக அனுமதி மற்றும் ரூ.38 கோடியே 80 லட்சத்துக்கான நிதியை ஒதுக்கீடு செய்து, சுற்றுச்சூழலே மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ டிசம்பர் 10, 2021 அன்று அரசாணை பிறப்பித்துள்ளார்.
அதில், பட்ஜெட்டில் அறிவித்த பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்க நிர்வாக அனுமதி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 265 கோடி உள்நாட்டு வகையை சேர்ந்த மரக்கன்றுகள் நடப்பட இருந்தன என்பது குறிப்பிடதக்கது. இதற்காக 2021-22 நிதியாண்டில் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 47 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்க ரூ.17 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்க ரூ.17 கோடியே 80 லட்சம் ஒகுக்கீடு செய்யப்படுகிறது" என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்முயற்சியின் ஒரு பகுதியாக இன்று காலை முதலமைச்சர், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர் பெருமக்கள், காவல்துறை மற்றும் செய்தியாளர்களும் இருந்தனர்.
மேலும் படிக்க:
குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப். 30-ம் தேதி வரை அனுமதி!
கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் 26 வரை விண்ணப்பிக்கலாம்
Share your comments