வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் TNAU சார்பில், தென்னை நோய் மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு மற்றும் உர மேலாண்மை கருத்தரங்கு தமிழக அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், மூலனூர் கிராமத்தில் நேற்று (19.05.2023) வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் சார்பில், தென்னை நோய் மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு மற்றும் உர மேலாண்மை கருத்தரங்கு நடைப்பெற்றது.
நிகழ்வுக்கு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கருத்தரங்கில் பங்கேற்ற தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்த விவரங்கள் பின்வருமாறு-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் தென்னை மரங்களுக்கு ஏற்படும் நோய்கள், அதனைபோக்கும் வழிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.
வேளாண் விவசாயிகளின் வாழ்வாதாராமாக தென்னை மரங்கள் உள்ளன. இந்நிலையில் தென்னை மரங்களில் பூச்சி தாக்குதல் என்பது விவசாயிகளுக்கு பெரும் இழப்பாக இருந்து வருகிறது. பூச்சி தாக்குதலிருந்து தென்னை மரங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் வகையில் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது. தகவல்தொழில்நுட்பம் வாயிலாக விவசாயிகள் தங்கள் வீடுகளிலிருந்தே தென்னை நோய் பூச்சி தாக்குதல் மற்றும் உரமேலாண்மை குறித்து அறிந்துகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தகருத்தரங்கை விவசாயிகள் நன்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும். இதுகுறித்த கையேடும் வெளியிடப்பட்டது.
கொங்கு மண்டலத்தில் குறுகிய கால பயிர்களினால் விவசாயிகளுக்கு வருமானம் போதுமானதாக இருப்பதில்லை. மேலும், விளைபொருட்களுக்கான விலை குறைவாக இருப்பதும், விவசாய கூலிகள் ஊதியம் அதிகம் போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு பாதிக்கப்படுகின்றனர்.
தென்னை மரங்கள் மூலம் விவசாயிகளுக்கான வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிபொறுப்பேற்ற பிறகு இரண்டு முறை வேளாண்மை துறைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மைத்துறையில் நிலத்தடி நீர் மேம்படுத்த தடுப்பணைகள், பயிர்களுக்கு ஏற்படும் நோய் தாக்குதலிருந்து பாதுகாப்பது, பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., இணை இயக்குநர்(வேளாண்மை) கா.முத்துலட்சுமி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர்கள் அருள்பிரகசம், லதா, தொலைதூரக்கல்வி இணைப்பு, பேராசிரியர் ராஜமாணிக்கம், வேளாண்மை துணை இயக்குநர் தா.புனிதா, பரம்பிகுளம் ஆழியார் பாசனத் திட்ட தலைவர் மெடிக்கல் பரமசிவம், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
pic courtesy: sammynathan minister twitter
மேலும் காண்க:
போன்சாய் மரம் வளர்க்க ஆர்வம் மட்டும் போதுமா? இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க
Share your comments