கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட்டில் மாணவர் சேர்க்கை (Student enrollment in August)
மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக டீன் கல்யாணசுந்தரம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் படி, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 2020-2021-க்கான இளங்கலை மாணவர் சேர்க்கை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கி வரும் 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பத்து இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான 2020-2021-ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இணையதள மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் நீ.குமார் தொடங்கி வைப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் உறுப்புக் கல்லூகளில் 1600 இடங்களுக்கும் இணைப்புக் கல்லூரிகளில் 3100 இடங்களுக்கும் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இளங்கலை பாடப்பிரிவுகள் (Undergraduate courses in TNAU)
இளங்கலை பாடப்பிரிவுகளான இளமறிவியல் (மேதமை) வேளாண்மை, இளமறிவியல் (மேதமை) தோட்டக்கலை, இளமறிவியல் (மேதமை) வனவியல், இளமறிவியல் (மேதமை) உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், இளம் தொழில்நுட்பம் (வேளாண் பொறியியல்), இளமறிவியல் (மேதமை) பட்டுவளர்ப்பு, இளம் தொழில் நுட்பம் (உணவுதொழில் நுட்பம்), இளம் தொழில்நுட்பம் (உயிரித் தொழில்நுட்பம்), இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுச் சுழல் பொறியியல்) மற்றும் இளமறிவியல் (வேளாண் வணிக மேலாண்மை) ஆகியவற்றிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஆன்லைன் மாணவர் சேர்க்கை (Online student admission)
மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு மற்றும் விண்ணப்பத்தினை நிரப்புதல் தரவரிசை பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இட ஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகளை ஒதுக்கீடு செய்தல், கல்லூரியில் சேருவதற்கான இடைக்கால அனுமதி வழங்குதல் ஆகிய அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பம் தேவையான விபரங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணத்தை www.tnauonline.in என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் மாதம் (2020) முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
உதவி எண்கள் அறிவிப்பு (Helpline Numbers)
மாணவர் சேர்க்கை குறித்த இதர விபரங்களை அறிந்து கொள்ள www.tnauonline.in இணையதளத்தில் உள்ள தகவல் கையேடு உதவிகரமாக இருக்கும். மேலும் விபரங்களுக்கு 0422-6611322, 0422-6611328, 0422-6611345, 0422-6611346 ஆகிய தொலைபேசி உதவி எண்களை அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
பட்டயப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கபபடும் என்றும் பல்கலைக்கழக டீன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நோய் பரவல் அதிகமுள்ள இந்த காலகட்டத்தில் மாணவர் சேர்க்கை குறித்த தகவல்களுக்காக பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு நேரில் வருவதை தவிர்த்து தொலைபேசி உதவிச்சேவை எண்களை பயன்படுத்துமாறும் கேட்டுகொண்டுள்ளார்.
மேலும் படிக்க...
ஓசூரில் ரூ.20 கோடி மதிப்பில் பன்னாட்டு மலர் ஏல மையம் - மலர் விவசாயிகள் மகிழ்ச்சி!
மூலிகைகளின் அரசி துளசியின் மருத்துவ குணங்கள் தெரியுமா உங்களுக்கு!
ஆண்டு முழுவதும் வருமானம் அளிக்கும் செடி முருங்கை சாகுபடி
Share your comments