கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம், ஜமீன் கோட்டாம்பட்ட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை உரத்தயாரிப்புக் கூடத்தினை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அரசு மருத்துமனையில் கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகை பயிற்சியினையும், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிதிட்டப் பணிகளையும் நேற்று (11.04.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்பாடி இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது, பொள்ளாச்சி நகராட்சித்தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சூலேஸ்வரன்பட்டி பேரூராட்சித் தலைவர் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, ஜென்கின்ஸ், ஜமீன்கோட்டாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியம், ஆகியோர் உடனிருந்தனர்.
மருத்துவமனையில் ஆய்வு:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் மாதிரி ஒத்திகை நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட மருத்துவகட்டமைப்புகளில் மாதிரி ஒத்திகை நடத்தப்படுகின்றது.
நேற்றைய முன்தினம், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார் நிலை குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து தொடர்ந்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளின் மூலமாக பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டங்கள் தொடர்பாகவும், பணிகளின் நிலை குறித்தும் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மண்புழு உரக்கூடத்தில் ஆய்வு:
அதன்படி, நேற்று பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஜமீன்கோட்டாம்பட்டி ஊராட்சியில் ரூ.1.40 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு உரக்கூடம், ஜஸ்வர்யம் நகரில் ரூ.6.80 இலட்சம் மதிப்பில் மியாவாக்கி நடைதளத்திற்கு நடைதளம் மற்றும் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளதையும், சூலேஸ்வரன்பட்டி கெம்பாகவுண்டர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ1.45 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டதுடன், கோப்புகள், பதிவேடுகள், நில விவரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு, சரிபார்த்து அது தொடர்பாக அதிகாரிகளிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப. விளக்கங்களை பெற்றார்.
மேலும் காண்க:
மாட்டு கோமியம் முதல் மனித சிறுநீர் வரை ஆய்வு- அதிர்ச்சி அளித்த IVRI ரிப்போர்ட்
Share your comments